அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை; ICC-க்கு ஏற்பட்ட இழப்பு - எத்தனை கோடி தெரியுமா?
அமெரிக்காவில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரால் ஐசிசி-க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணி முன்னேறின. இதில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது.
அமெரிக்காவில் தொடர் தொடங்கப்பட்ட போதே மோசமான ஆடுகளம் மற்றும் போட்டி நடைபெறும் நேரங்கள் தொடர்பான 2 விஷயங்களால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
167 கோடி இழப்பு
இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரால் ஐசிசி-க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தியதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) சுமார் ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் தொடங்கும் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டின் போது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த தலைப்பு, ஆண்டு பொதுக் கூட்டத்தின் (AGM) 9 அம்ச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், நிகழ்வுக்கு பிந்தைய அறிக்கையாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
