ICC தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா? பாகிஸ்தான் தான் முக்கிய காரணம்- பகீர் பின்னணி!
ஐசிசி தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி தலைமை அதிகாரி
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து குளறுபடிகள் நடந்து வருவதாகப் புகார் எழுந்து வருகிறது.இதற்கிடையே ஐசிசி தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான்
இது குறித்து ஜெஃப் அலர்டிஸ் கூறுகையில்,’’ஐசிசி தலைமை அதிகாரியாகச் செயல்பட்டது எனக்குப் பெருமை அளிக்கிறது.என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். தற்பொழுது ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறியிருந்தார்.
இவரது ராஜினாமாவிற்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மைதானங்கள் தயார் செய்யப்பட்டு ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த டிசம்பர் மாதமே வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை மெத்தனப் போக்கு காரணமாக மைதானங்கள் சரியாகத் தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.