டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - தேதியை அறிவித்த ஐசிசி!
3ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் தேதியை ஐசிசி கவுன்சில் அறிவித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது . அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து கடந்தாண்டு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.
இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி கவுன்சில்
தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போதைக்கு முதலிடத்தில் உள்ளது.2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் , 3ஆவது இடத்தில் நியூசிலாந்தும் , 3ஆவது இடத்தில் பங்களாதேஷ் உள்ளது.
மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.