செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2023 - இரண்டாம் சுற்றும் டிரா!
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.
பிரக்ஞானந்தா
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) இன்று மோதினார்.
டிரா
இந்நிலையில் இன்று இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. நேற்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், இந்த இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.
முன்னதாகவே இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ல்சன் 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியைப் போன்றே டிரா செய்யும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.