அடுத்து ஆணுறை கோரிக்கையா? சிறுமிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பகீர் பதில்!

Viral Video Bihar
By Sumathi Sep 29, 2022 05:37 AM GMT
Report

சானிட்டரி நாப்கினை சலுகை விலையில் வழங்க பள்ளிச் சிறுமி கோரிக்கைக்கு அதிர்ச்சியான பதில் கூறப்பட்டுள்ளது.

நாப்கின் சலுகை

பீகாரில், ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பள்ளி சிறுமிகளும், மாநில குழந்தைகள் நல மேம்பாட்டு துறை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அடுத்து ஆணுறை கோரிக்கையா? சிறுமிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பகீர் பதில்! | Ias Officer Reply To Girl Will Ask Condoms Bihar

இதில், சிறுமி ஒருவர் ‘அரசு எங்களுக்கு பள்ளி சீருடைகள் உள்பட எங்களுக்கு தேவையானவற்றை வழங்குகிறது. இந்த அரசால் சானிட்டரி நாப்கினை 20-30 ரூபாய்க்கு வழங்க முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்து ஆணுறையா?

இந்த கேள்விக்கு பதில் அளித்த ஐஏஎஸ் அதிகாரி பாம்ரா, ‘கைத்தட்டும் சிறுமிகளே உங்களது கோரிக்கைளுக்கு முடிவு இருக்கிறதா என்பதை சொல்ல வேண்டும். நாளைக்கு நீங்கள் அரசிடம் ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள்.

அதற்கு பிறகு அழகான ஷூக்கள் கேட்கலாம். அரசிடம் நீங்கள் ஆணுறை கூட கேட்டு கோரிக்கை வைக்க கூடும். ஏன் எல்லாவற்றையும் இலவசமாக பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று பதில் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 நான் இந்தியன்

இதற்கு பதில் கூறிய சிறுமி, ‘மக்கள் வாக்களித்துதானே அரசை உருவாக்குகிறார்கள்’ என்றார். இதற்கு பதில் அளித்த பாம்ரா, ‘இது முட்டாள்தனமான பதில். நீங்கள் வாக்களிக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு போங்கள்.

பணத்திற்கும், சேவைக்கும் தானே வாக்களிக்கிறீர்கள்?’ என்று கூறினார். உடனே அந்த சிறுமி, ‘நான் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும். நான் இந்தியன்’ என்று கூறி அதிர வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.