T20 World Cup: விராட் கோலி அதுக்கு வேண்டாம்; இவரை போடுங்க - பிரபல வீரர் அறிவுரை!
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இதனையடுத்து 97 என்ற சுலப வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசி 52 ரன்னில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார்.
இயன் பிஷப்
இந்நிலையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "உண்மையில் ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக தான் இருந்தது.
ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக் கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும். ஒரு இடதுகை ஆட்டக்காரர் இந்திய அணியின் தொடக்க வீரராக இருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.