நான் இருக்கும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன் - சீமானின் கோவத்திற்கு காரணம்?
நான் இருக்கும் வரை அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
எண்ணூர்
வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று 20.12.2024 எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பங்கேற்றார்.
அப்போது, பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வருகிறது.
இந்த நிலையில் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துகருத்துகளைப் பதிவு செய்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
சீமான்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எது வளர்ச்சி , தாயைக் கொன்றுவிட்டு வளத்தின் மேல் நிற்பது வளர்ச்சி அல்ல. மாற்றுத்திட்டம் தேவைதான் . காற்றாலை, சூரிய சக்தி உள்ளிட்ட இடங்களில் மின் திட்டங்களை உற்பத்தி செய்ய முடியும் .
ஆனால் இதை விட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசியவர், ‘’நான் இருக்கும் வரை அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டேன் என்று கூறினார்.