வடிவேலு என்னை தவறாக சித்தரித்து.. அதில் அவருக்கு உரிமை இல்லை - சிங்கமுத்து பளார்!

Tamil Cinema Chennai Vadivelu Madras High Court
By Swetha Oct 03, 2024 06:00 PM GMT
Report

நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன் என்று நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

வடிவேலு - சிங்கமுத்து

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் காமெடி சீன்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில கருத்து வேறுப்பாடு காரணமாக ஒரு கட்டத்திலிருந்து இணைந்து நடிக்காமல் இருந்தனர்.

வடிவேலு என்னை தவறாக சித்தரித்து.. அதில் அவருக்கு உரிமை இல்லை - சிங்கமுத்து பளார்! | I Was Behind Vadivelus Success Says Singamuthu

மேலும் தாம்பரத்தில் பிரச்சனைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்தார் வடிவேலு. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து,

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல்.

எனவே சிங்கமுத்து ரூ.5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

வடிவேலு பண்ண கூத்து; கல்லால அடிச்சு கொல்லுவாங்க - உண்மையை உடைத்த சிங்கமுத்து!

வடிவேலு பண்ண கூத்து; கல்லால அடிச்சு கொல்லுவாங்க - உண்மையை உடைத்த சிங்கமுத்து!

உரிமை இல்லை

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும், என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று சிங்கமுத்து தரப்பில் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வடிவேலு என்னை தவறாக சித்தரித்து.. அதில் அவருக்கு உரிமை இல்லை - சிங்கமுத்து பளார்! | I Was Behind Vadivelus Success Says Singamuthu

அதில் கூறப்பட்டிருப்பது, நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன். மனஉளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்து கூறவில்லை.

என்னை துன்புறுத்தும் நோக்கில் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி வடிவேலு தவறாக சித்தரித்தார். அவர் சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை.

அவரை பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.