நான் பாஜக'ல சேர்ந்துட்டேனா..உயிருள்ள வரை அதிமுக தான் - முன்னாள் MLA...!
பாஜகவில் தான் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைத்தனர் என்ற செய்தி தலைப்பு செய்தியாகவே மாறியது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்றாலும் அவர்கள் தற்போது அரசியலில் ஓரம்கட்டுப்படவிட்டதாக விமர்சனங்கள் வந்தாலும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுதல் என்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நபர் குறித்து பட்டியல் வெளியான நிலையில், அதில் இடம் பெற்றிருந்த திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி, வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
விளக்கம்
அந்த வீடியோவில், “எம்ஜிஆர் வழிக்காட்டுதலாலும், அதன் பிறகு அம்மாவின் வழிகாட்டுதாலும் 2011ஆம் ஆண்டு அவினாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அம்மா அவர்கள் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள்.
அம்மா அவர்களுக்கு பிறகு எடப்பாடியார் அவர்கள் வழிகாட்டுதலோடு தான் கழக பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் தான் பாஜகவில் இணைந்துவிட்டதாக பொய்யான தகவல்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
⚡அதிமுக முன்னாள் எம்எல்ஏ அவிநாசி கருப்பசாமி பாஜகவில் இணைந்ததாக பட்டியல் வெளியாகி இருந்த நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை அதிமுகவில் தான் பயணிக்கிறார் என்று காணொளி வெளியிட்டுள்ளார்.#ADMK #BJP pic.twitter.com/2ljhXrtF8y
— Raj ✨ (@thisisRaj_) February 7, 2024
தன்னுடைய உயிர் உள்ள வரையில் அதிமுகவில் தொடர்ந்து பணிபுரிவேன், வேற இயக்கத்திற்கு செல்லமாடேன் என கருப்பசாமி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.