விஜய் அப்படி செய்யுறது எனக்கு பிடிக்காது - மனந்திறந்த திரிஷா

Vijay Trisha Tamil Actress
By Karthick May 04, 2024 11:18 AM GMT
Report

இன்று நடிகை திரிஷா தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திரிஷா

பெரும்பாலான நடிகைகள் 30 வயதை நெருங்கினாலே, சினிமாவை விட்டு விலகி விடும் சூழலில், தற்போது 40 வயதை எட்டி இருக்கும் நிலையிலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.

trisha in saree

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கவர்ந்த திரிஷா, விஜய்யுடன் லியோ படத்திலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார்.

beautiful trisha in gown

மணிரத்னத்தின் "Thug life", அஜித்தின் "விடாமுயற்சி", தெலுங்கில் சிரஞ்சீவியுடன் "விஸ்வம்பரா", விஜய்யின் "GOAT" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அடுத்தடுத்த முன்னணி நாயகர்களின் படத்தில் கமிட்டாகி வருகின்றார் திரிஷா.

திரிஷாவுடன் முறிந்த நிச்சயம் - இப்போ சிவகார்த்திகேயன் நடிகையுடன் நெருக்கம் காட்டும் வருண்

திரிஷாவுடன் முறிந்த நிச்சயம் - இப்போ சிவகார்த்திகேயன் நடிகையுடன் நெருக்கம் காட்டும் வருண்

பிடிக்காத  விஷயம்

தமிழ் சினிமாவில் விஜய் திரிஷா ஜோடி எப்போதும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஒரு ஜோடியாகவே உள்ளார்கள். கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ போன்ற படங்களில் இவர்களது ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

trisha beautiful in white saree

இன்று, திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் - திரிஷா ஜோடியாக அளித்த வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகின்றது.

vijay and trisha

அப்பேட்டியில், உங்களுக்கு விஜய்யிடம் பிடிக்காத விஷயம் என்னவென்று கேட்கப்பட்ட நிலையில், அதற்கு திரிஷா விஜய்யின் அமைதி தனக்கு சில சமயங்களில் பிடிக்காது என்று கூறி, அவரை தான் புரிந்து கொண்டாலும், சிலருக்கு அவரை அணுகுவதில் சிக்கல் இருக்கும் என்றும் திரிஷா கூறினார்.