திரிஷாவுடன் முறிந்த நிச்சயம் - இப்போ சிவகார்த்திகேயன் நடிகையுடன் நெருக்கம் காட்டும் வருண்

Sivakarthikeyan Trisha
By Karthick Apr 22, 2024 06:59 AM GMT
Report

திரிஷா - வருண் மணியன் ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது.

திரிஷா

பெரும்பாலான நடிகைகள் 30 வயதை நெருங்கினாலே, சினிமாவை விட்டு விலகி விடும் சூழலில், தற்போது 40 வயதை எட்டி இருக்கும் நிலையிலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.

trisha-ex-boyfriend-varun-manian-with-actress

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கவர்ந்த திரிஷா, விஜய்யுடன் லியோ படத்திலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார்.

trisha-ex-boyfriend-varun-manian-with-actress

மணிரத்னத்தின் "Thug life", அஜித்தின் "விடாமுயற்சி", தெலுங்கில் சிரஞ்சீவியுடன் "விஸ்வம்பரா", விஜய்யின் "GOAT" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அடுத்தடுத்த முன்னணி நாயகர்களின் படத்தில் கமிட்டாகி வருகின்றார் திரிஷா.

trisha-ex-boyfriend-varun-manian-with-actress

தற்போது 40 வயதாகியுள்ள திரிஷா, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற நடிகையாகவும் சிறப்பு பெற்றுள்ளார். தொழில் முறை வாழ்வில் பெரும் பரபரப்பாக இருக்கும் திரிஷாவின் தனிப்பட்ட வாழக்கை அவ்வளவு இனிப்பானதாக இல்லை.

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

சிவகார்த்திகேயன் நடிகையுடன்...

கடந்த 2015-ஆம் ஆண்டு திரிஷா வருண் மணியன் என்பவரை காதலித்து அவர்களது உறவு நிச்சயதார்த்தம் வரை சென்றது ஆனால், அந்த உறவு அத்துடன் முடிவடைந்தது. ,திரிஷா அதன் பிறகு பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் அவை எதுவும் உறுதியாகவில்லை.

trisha-ex-boyfriend-varun-manian-with-actress

இந்த சூழலில் தான், சில மாதங்கள் முன்பு வருண் மணியன் தமிழ் நடிகையான பிந்து மாதவியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் வைரலானது. அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை.