யாரு என்ன'ன நினைச்சுக்கோங்க..நா இப்படி தான் -ரியான் பராக் பதிலடி !!
இளம் கிரிக்கெட்டர் ரியான் பராக், சில தினங்களுக்கு முன்பு யூடியூப் வீடியோ சர்சைககளில் சிக்கி பெரும் விமர்சனங்களை பெற்றார்.
ரியான் பராக்
ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் கிரிக்கெட் வீரர்கள் முக்கியமான வீரராக உருப்பெற்றுள்ளார் ரியான் பராக். நடந்து முடிந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர்.
573 ரன்கள் குவித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான், தொடரின் இடையில் ஆரஞ்சு கேப்'பையும் வென்றிருந்தார். பலரின் பாராட்டுகளை பெற்ற அவர், சில தினங்களுக்கு முன் யூடியூப் தளத்தில் நடிகைகளை குறித்து ஆபாச தேடுதலில் சிக்கி கடும் விமர்சனங்களை பெற்றார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரியான் பராக், தனது பேட்டிங் உண்மையில் திருப்தி கொடுக்கவில்லை என கூறி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தனக்கு நல்ல சீசனாக அமைந்தாலும், சில போட்டிகளை ராஜஸ்தான் அணிக்காக போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
என்ன நினைக்கிறார்கள்
இதன் காரணமாக, நடைபெறவிருக்கும் உள்ளூர் போட்டிகளில் இறுதி வரை போட்டியில் நின்று ஆடவேண்டும் என திட்டத்துடன் இருப்பதாக தெரிவித்தார். தொடரில் அணி நம்பர் 3ல் முடித்தது மகிழ்ச்சி தான் என கூறி, தோல்வியில் இருந்து வெளி வருவது தனக்கு எளிதான விஷயமே என்றார்.
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி தனக்கு ஒருபோதும் கவலை இருந்ததில்லை என்று கூறிய ரியான், 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிற்காக தான் விளையாட மாட்டேன் என்று பலரும் கூறி நிலையில், தற்போது இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பதை கூறினார்.