Tuesday, Jul 8, 2025

நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது : கொந்தளித்த சசிகலா

ADMK V. K. Sasikala
By Irumporai 3 years ago
Report

திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய சசிகலா:

இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது : கொந்தளித்த சசிகலா | I Am Admk Cannot Be Usurped Or Destroyed Sasikala

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அ.தி.மு.க.வை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது.

வீர தமிழச்சியாக சொல்கிறேன்

தி.மு.க. எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது.

நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது : கொந்தளித்த சசிகலா | I Am Admk Cannot Be Usurped Or Destroyed Sasikala

அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கை லட்சியம். 2016 டிசம்பர் மாதம் வரை நடந்தது மட்டும்தான் உண்மையான பொதுக்குழு கூட்டங்கள்.

அ.தி.மு.க.வை அழிக்க முடியாது 

அதன் பின்னர் நடந்தது எல்லாமே நிர்வாகிகள் கூட்டங்களாகவே கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர். நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது. அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது என கூறினார்.

மக்கள் என்னைத்தான் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் ஆசைப்படுகிறார்கள் - சசிகலா பேட்டி