இனி 30 நிமிடங்களில் பெங்களூரு - சென்னை பயணம் - இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில்
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஹைப்பர்லூப்
ஹைப்பர்லூப் என்பது போக்குவரத்து உயர் தொழில்நுட்பம். இதில் ஒரு காப்ஸ்யூல் போன்ற பாட், குறைந்த அழுத்த குழாயின் உள்ளே செலுத்தப்படுகிறது.
தண்டவாளங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, காந்த விசையைப் பயன்படுத்தி, செயல்படும் என கூறப்படுகிறது. இது மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தை அடைகிறது.
பெங்களூரு - சென்னை
இந்த திட்டம் தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், ஆனால் எதிர்காலத்தில் இது போக்குவரத்தை மறுவரையறை செய்யும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் முடிவடைந்த பின்னர், பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் திட்டம், நகரங்கள் இணைப்பில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
இதற்கிடையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் முனைப்பில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.