சாலையில் பண கட்டுகளை வீசிய யூடியூபர் - இறுதியில் நடந்த டிவிஸ்ட்
யூடியூபர் சாலையில் பணக்கட்டுகளை வீசியுள்ளார்.
யூடியூபர்
சமூகவலைத்தளங்களில் பிரபலமாக ஆசைப்பட்டு பலரும் வித்தியாசமான செயல்களை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
இதே போல் ஹைதராபாத்தை சேர்ந்த யூடியூபர் வெளியிட்ட வீடியோவிற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண கட்டுகள்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்த பானு சந்தர்(30) இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் கன்டன்ட் கிரியேட்டராக உள்ளார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் ஹைதராபாத் புறநகர் ரிங் ரோடு பகுதிக்கு சென்ற இவர், மூட்டையில் இருந்து ரூ20,000 மதிப்புள்ள 200 ரூபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து அங்குள்ள சாலை ஓரத்தில் வீசினார்.
கைது
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பலரும் அந்த பகுதிக்கு சென்று பணக்கட்டுகளை தேட தொடங்கினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்தை சீர் செய்தனர்.
The Hyderabad Police have registered a case against a YouTuber whose viral video titled ‘Money Hunting Challenge’ caused a public disturbance on the ORR. Bhanuchander, alias Anchor Chandu (30), a resident of Balanagar, has been taken into custody by Ghatkesar police for… pic.twitter.com/KL0AOEuY8q
— V Chandramouli (@VChandramouli6) December 18, 2024
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் பானு சந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பானு சந்தர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.