3வது மாடியில் நாயை விரட்டி கொண்டு ஓடிய இளைஞர் - இறுதியில் நேர்ந்த சோகம்; பதற வைக்கும் வீடியோ

Andhra Pradesh Hyderabad Death
By Karthikraja Oct 22, 2024 12:00 PM GMT
Report

 நாயை விரட்டி கொண்டு ஓடிய இளைஞர் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது.

பிறந்தநாள் விருந்து

ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்த உதய்(23) ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திராபுரம் அசோக் நகரில் வசித்து வந்தார். 

man fell from 3rd floor chasing dog hyderabad

கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.10.2024) இரவு, பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்ள தனது நண்பர்களுடன் சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - கடத்தலில் இறங்கிய நடிகை

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - கடத்தலில் இறங்கிய நடிகை

நாயை துரத்தி பலி

அப்போது 3 வது மாடியில் எதிரே தென்பட்ட நாய் ஒன்றை துரத்தி அதன் பின் ஓடியுள்ளார். வேகமாக ஓடிய அவர் நிலை தவறி பால்கனியில் திறந்திருந்த ஜன்னல் வழியே கீழே விழுந்துள்ளார். இதில் உதய் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உதயின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சந்தாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.