காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - கடத்தலில் இறங்கிய நடிகை
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
நடிகை ஷப்ரீன்
க்ரைம் பேட்ரோல் என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருபவர் நடிகை ஷப்ரீன். இவர் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தை சேர்ந்த பிரிஜேஷ் சிங் என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்த போது இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரிஜேஷ் சிங் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதலுக்காக கடத்தல்
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற பிரிஜேஷ் சிங்கின் 3 வயது உறவுக்கார சிறுவனான பிரின்ஸ் என்பவர் பள்ளி முடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக பிரிஜேஷ் சிங்கின் குடும்பத்தார் காவல் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை விசாரித்த காவல் துறையினர், அந்த சிறுவனை கடத்தியது நடிகை ஷப்ரீன் எனத் தெரிய வந்து அவரை கைது செய்துள்ளனர். சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தனது காதலுக்கு பிரிஜேஷ் சிங் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை ஒத்துக்கொள்ள வைக்க இந்த செயலில் ஈடுபட்டதாக ஷப்ரீன் வாக்குமூலம் அளித்துள்ளார்.