சிரிச்சா அழகா தெரியணும்; ஆப்ரேஷன் செய்த மணமகன் - கல்யாணத்திற்கு முன் சோகம்!
ஸ்மைல் டிசைனிங் அறுவை சிகிச்சை மேற்கொண்ட புது மாப்பிள்ளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்மைல் டிசைனிங்
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நாராயண விஞ்சம்(28). இவருக்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில், நண்பர்கள் சிலர் பரிந்துரைத்ததனன் அடிப்படையில் புன்னகை மேம்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். கல்யாண நாளுக்கு முன்பாக முகத்தில் புன்னகையுடனேயே இருப்பதற்கு வழி தேடியுள்ளார்.
அதன்பின், முன்னணி பல் மருத்துவமனை ஒன்று, புன்னகை அதிகரிப்புக்கான விசேஷ சிகிச்சை அளிப்பதாக அறிந்து அங்கே சென்று விசாரித்துள்ளார். அதனப்டி, ஜூப்லி ஹில்ஸில் உள்ள ’எஃப்.எம்.எஸ் சர்வதேச பல் மருத்துவமனையில் 'ஸ்மைல் டிசைனிங்' அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இளைஞர் பலி
ஆனால், 2 மணி நேர சிகிச்சையில் அவர் உயிரிழந்தார். அதனையடுத்து, உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோர் உட்பட எவரிடமும் தெரிவிக்காமல் அவர் சிகிச்சை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அறுவைசிகிச்சைக்கான மயக்க மருந்தினை அதிகம் கொடுத்ததே இறப்புக்கு காரணம்.
முன்னதாக மகனுக்கு எந்த உடல்நலக் குறைவும் இருந்ததில்லை என்று அவரது தந்தை ராமுலு விஞ்சம் புகார் தெரிவித்துள்ளார். முதற்கட்ட நடவடிக்கையாக அறுவைசிகிச்சையில் அலட்சியம் காட்டியதாக மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.