இனி.. ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டும்தான் - பின்னணி என்ன?
தெலங்கானாவுக்கு மட்டுமே ஹைதராபாத் தலைநகராக விளங்கும்.
ஹைதராபாத்
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இவை, 2014 ஜூன் 2 முதல் அமலுக்கு வந்தன.
அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மிகாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு, பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், அந்த காலகட்டத்துக்குள் ஆந்திராவுக்கென தனி தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என்றும்,
தலைநகர் விவகாரம்
10 ஆண்டுகளுக்கு பின், தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் விளங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், 10 ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டது. இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் இருக்கும்.
2019 - 2024 மே வரை ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார்.
அதில் கூட, ஆந்திராவுக்கு தலைநகர் கிடைக்கவில்லை. தற்போது, தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், வெற்றி பெறும் கட்சி, தலைநகர் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.