வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் - சோதனை செய்த பாஜக பெண் வேட்பாளர்
ஹைதராபாத் பாஜக வேட்பாளரான மாதவி லதா அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
மாதவி லதா
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார் கொம்பெல்லா மாதவி லதா. இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வாக்குச் சாவடிக்கு பர்தா அணிந்த வந்த முஸ்லீம் பெண்களை அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்களுடன் பொருத்தி பார்க்கும் வகையில் முகத்தினை வெளிப்படுத்துமாறு மாதவி லதா பேசியுள்ளார்.
அம்பு
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் வேட்பாளர் ஒருவர் இப்படி செய்யலாமா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
முன்னதாக, இதே மாதவி லதா தான், பிரச்சாரத்தின் போது, ராமநவமி தினத்தில் மசூதி ஒன்றை நோக்கி அம்பு விடும் படி செய்கை செய்து சலசலப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு பின்னர் தான் இயல்பாக செய்தது, இவ்வாறு வெளிப்பட்டுவிட்டது என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
Who has given her authority to harass Muslim women in the name of voter verification? @ECISVEEP to please cancel her candidature #MadhaviLatha pic.twitter.com/GuWyt7o5n8
— Indian Doctor (@doctor4india) May 13, 2024