ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் - வைரலாகும் புகைப்பட பின்னணி
கணவனின் சடலத்தின் அருகே அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 28 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலும் சுற்றுலா பயணிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
கணவனின் சடலத்தின் அருகே அதிர்ச்சியில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம்தான் அது. தேனிலவு கொண்டாட்டத்திற்காக வந்த இடத்தில் கணவனை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
ஹரியானாவை சேர்ந்தவர் வினய் நர்வால். கொச்சியில் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்தவர். ஹிமான்ஷி என்ற பெண்ணை ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி திருமண வரவேற்பு நடந்துள்ளது. பின் தேனிலவுக்காக கணவன் மனைவி இருவரும் காஷ்மீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.