விருந்தாளிக்கு மனைவிகளை இரவு விருந்தாக்கும் கணவன்கள் - எங்கு தெரியுமா?
பழங்குடியினரிடையே விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கும் பழக்கம் உள்ளது.
ஹிம்பா மக்கள்
நமீபியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஹிம்பா மக்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 50,000 பேர் தான். இவர்களுக்கு சொந்த வீடுகள் இருந்தாலும்,
அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வறட்சி ஆகிய காரணங்களால் இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் விசித்திரமாக நடைமுறைகளை கொண்டுள்ளனர்.
விசித்திர பழக்கம்
ஆப்பிரிக்காவில் உள்ள வரலாற்று தொலைக்காட்சி, சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஹிம்பா பழங்குடியினர், தங்கள் மனைவிகளை பாலினத்திற்காக விருந்தினர்களுக்கு கொடுப்பதை விருந்தோம்பலின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதுகிறார்கள்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்கும் ஒரு வழியாக இதனை எண்ணுகின்றனர். மேலும், பாலியல் பொறாமை உணர்வு தவிர்க்கப்படும் என்றும் நம்புகிறார்கள். மிகவும் பழமைவாத திருமண முறைகளை கடைபிடிக்கிறார்கள்.
இங்குள்ள ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது வழக்கமானதாக உள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான ஹிம்பா ஆண்கள் யாரோ ஒருவருக்கு பிறந்த குழந்தையைதான் வளர்க்கிறார்கள்.
தற்போது இவர்களது வாழ்க்கை முறை மெதுவாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.