இப்படி ஒரு காரணமா? kurkure வாங்கி தர கணவர் மறுத்ததால் விவாகரத்து கேட்ட மனைவி!
கணவன் குர்குரே வாங்கித்தர மறுத்ததால் அவரது மனைவி விவாகரத்து கேட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
கணவர் மறுப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த இளம்பெண், இளைஞர் ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண வாழ்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. நொறுக்குத் தீனி மீது ஆர்வம் கொண்ட இளம்பெண், தனது கணவனிடம் ஆசையாக குர்குரே பாக்கெட் ஒன்றை வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் கணவர் வாங்கி தர மறுத்துள்ளார். இதுவே நாளடைவில் கணவன், மனைவிக்குள் பெரும் பிரச்சினையாக வெடித்தது. இந்த நிலையில், ஒரு குர்குரே பாக்கெட் கணவன் வாங்கித் தராததால், கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம்பெண்,
மனைவி விவகாரத்து
தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.இந்த காரணத்தை கேட்ட அதிர்ச்சியடைந்தனர். இப்புகார் தொடர்பாக, அந்த இளம்பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை நடத்தினர்.அப்போது முன்பெல்லாம் தான் கேட்ட உடனே வாங்கித் தந்த கணவர்,
இப்போது அதை வாங்கித் தரவில்லை என்றும், தான் குர்குரே வாங்கித் தர கேட்டால் உடல் ரீதியாக தன்னை தாக்கியதாகவும் அந்த இளம்பெண் புகாரில் கூறியுள்ளார்.இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.