குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி - கத்திரிக்கோலால் குத்தி கணவன் வெறிச்செயல்!
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை, கணவன் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
ஈரோடு வீரப்பன்சத்திரம் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). மரக்கட்டில், மேஜைகளுக்கு பாலீஸ் போடும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (22). தறிபட்டறை தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரியா பிரிந்து வந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அங்கு சென்று செந்தில்குமார் தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் வயிறு கழுத்து பகுதிகளில் கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். கதறிய மனைவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உடனே செந்தில் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்துள்ளனர்.