8 சிறுமி உட்பட 12 மனைவிகளையும் பாலியல் தொழிலில் விற்ற கணவர்.. பகீர் சம்பவம்!

Sexual harassment India Child Abuse Bihar
By Sumathi Jun 26, 2022 05:06 AM GMT
Report

12 மனைவிகளையும் ஒவ்வொருவராக பாலியல் தொழிலில் விற்பனை செய்துள்ளார் கணவர். பீகார் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடுமை.

சிறுமி  திருமணம்

பீகார் மாநிலத்தில் கிஷன்கஞ்ச் மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள அனார்கலி கிராமத்தில் வசித்து வருபவர் முகமது ஷம்சத். 32 வயதான இந்த இளைஞர் 8 சிறுமிகள் உட்பட 12 பேரை திருமணம் செய்துள்ளார்.

8 சிறுமி உட்பட 12 மனைவிகளையும் பாலியல் தொழிலில் விற்ற கணவர்.. பகீர் சம்பவம்! | Husband Who Sold 12 Wives To Prostitution Gang

அவர்களை விற்பனை செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் நவம்பர் 25ஆம் தேதியன்று தனது மகளை திருமணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்லி வந்தார் ஷம்சத்.

அதிர்ச்சி

அவர் சிறுமி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கடத்திச் சென்றுவிட்டார் என்று சிறுமியின் தந்தை முகமது காசிம் என்பவர் அனகார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

8 சிறுமி உட்பட 12 மனைவிகளையும் பாலியல் தொழிலில் விற்ற கணவர்.. பகீர் சம்பவம்! | Husband Who Sold 12 Wives To Prostitution Gang

அந்த புகாரின் பேரில் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் தேடி வந்துள்ளனர் . போலீசாரின் தேடலில் கிஷன் கஞ்ச் பகுதியில் அந்த சிறுமியை மீட்டுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து முகமது சம்ஷத் சிக்காமல் தப்பி ஓடி இருக்கிறார்.

12 பேரை திருமணம் 

இதையடுத்து முகமது சம்ஷத்தை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். தீவிர தேடலில் சம்ஷத்தை கைது செய்துள்ளனர் போலீசார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடையும் படி பல தகவல்களை சொல்லி இருக்கிறார்.

இதுவரைக்கும் அந்த வாலிபர் 8 சிறுமிகள் உள்பட 12 பேரை திருமணம் செய்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கு திருமணம் ஆகவில்லை தான் திருமணம் ஆகாதவர் என்று சொல்லி அறிமுகமாகி,

பாலியல் தொழில்

பழகி திருமணம் செய்து அதன் பின்னர் அவர்களை விபச்சார தொழிலில் தள்ளியிருக்கிறார். அந்த வாலிபரிடம் சிக்கிய அனைவரும் முஸ்லிம் சமூகத்தினர் என்று கூறியிருக்கிறார்.

கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் தாகுர்கஞ்ச் சிவப்பு விளக்கு பகுதியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளுவதை வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக

அந்த சிறுமிகளை மேற்கு வங்காளத்தில் விற்பனையும் செய்து வந்திருக்கிறார். முகமது சம்சுதீன் வாக்குமூலத்தை அடுத்து அவரால் விற்கப்பட்டிருக்கும் அனைத்து சிறுமிகளையும் மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.