பள்ளி தோழியை திருமணம் செய்த பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் - குவியும் வாழ்த்துக்கள்

samugam-marrige
By Nandhini Dec 10, 2021 11:04 AM GMT
Report

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ்.

இவர் தற்போது பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது பள்ளித் தோழியும், அரியானா மாநிலத்தின் தொழில் அதிபரின் மகளுமாகிய ராகேல் ஐரிஸ் என்பவரை நேற்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமண நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி தெரிவித்தனர். மேலும் இவரது திருமணத்திற்கு உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சென்றார்.    

பள்ளி தோழியை திருமணம் செய்த பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் - குவியும் வாழ்த்துக்கள் | Samugam Marrige