மணிக்கட்டு நரம்பை துண்டித்து மனைவி, மகளை கொன்ற கொடூரம் - இறுதியில் விபரீத முடிவு!

Chennai Crime
By Sumathi Jul 19, 2023 04:04 AM GMT
Report

மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லை

சென்னை, தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் அரவிந்த்(34). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சுஜிதா(32). இவர்களுக்கு ஐஸ்வர்யா(7) என்ற பெண் குழந்தை இருந்தார்.

மணிக்கட்டு நரம்பை துண்டித்து மனைவி, மகளை கொன்ற கொடூரம் - இறுதியில் விபரீத முடிவு! | Husband Suicide Killing Wife And Daughter Chennai

இந்நிலையில், இவருக்கு 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இவரால் கடனை சரிவர அடைக்கமுடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுத்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

 தற்கொலை முடிவு

அதனையடுத்து, இரவு உணவு அருந்தி விட்டு தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் அதிகளவு மயக்க மாத்திரை கொடுத்துள்ளார். தன்னுடைய மனைவி மயக்கமடைந்ததும் அவருடைய மணிக்கட்டில் உள்ள நரம்பினை துண்டித்துள்ளார்.

பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்து கொண்டார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்ததில் அரவிந்த் மயக்கநிலையில் கிடந்துள்ளார். மகள், மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே. விரைந்து வந்த போலீஸார் அரவிந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கடன் தொல்லையால் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரியவந்தது.