மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் மாடியிலிருந்து குதித்து கணவன் தற்கொலை!
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் துக்கம் தாங்காமல் கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சுஜாதா.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே திருமணமாகி, பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவிற்கு நீண்டகாலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
எவ்வளவோ சிகிச்சை மேற்கொண்டும், வயிற்று வலி குணமாகவில்லை. சுஜாதா தன் தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், சுஜாதாவை தாய்வீட்டிலிருந்து பர்கூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் புருஷோத்தமன்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்த பின்னர், சுஜாதாவை பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள காவலர் குடியிருப்பில் தங்க வைத்துவிட்டு, காவல்நிலையம் சென்று வேலைகளை பார்த்துள்ளார்.
வேலை முடித்துவிட்டு மனைவியை அழைத்துசெல்ல, வந்தபோது, அங்கே மனைவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ந்து அடைந்தார். மனைவி தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்த புருஷோத்தமன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் கணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.