ராணி மாதிரி வச்சுருந்தேன்; தூக்கில் போடுங்க; காதலனுடன் ஓடிய மனைவி - கதறிய கணவன்!

Crime Kanyakumari Death
By Sumathi Feb 05, 2025 04:17 AM GMT
Report

மனைவியால், கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் செயல் 

கன்னியாகுமரி, கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின்(47). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுனிதா (45).

சுனிதா - பெஞ்சமின்

இவர்களுக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லை. சுனிதாவின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெஞ்சமின் இதுகுறித்து கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சுனிதா திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். உடனே, வெளிநாட்டில் இருந்து பெஞ்சமின் கிளம்பி வந்துள்ளார். பின் போலீஸில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் பெஞ்சமின் விஷம் குடித்து உயிரிழந்தார். முன்னதாக அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில்,

சாலையில் மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவி - விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்!

சாலையில் மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவி - விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்!

கணவன் தற்கொலை

எஸ்பி அய்யா, 19 வருடங்களாக என் மனைவியை நான் ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் போய் விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். எனது மனைவி உறவினர், வக்கீல் ஒருவரும் என்னை மிரட்டினார்கள். என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தாங்க.

ராணி மாதிரி வச்சுருந்தேன்; தூக்கில் போடுங்க; காதலனுடன் ஓடிய மனைவி - கதறிய கணவன்! | Husband Suicide For Wife Affair Kanyakumari

அதை நான் மேலே இருந்து நிச்சயம் பார்ப்பேன். என்னை கொஞ்சம், கொஞ்சமாக மனைவியின் கள்ளக்காதலன் கொன்றுள்ளான், எஸ்பி அய்யா, அவனை விட்டு விடாதீங்க. வியாகுல மாதா அன்னையாக உங்களை கருதுகிறேன். நடவடிக்கை எடுங்கள் என கதறி அழுதிருந்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுனிதாவை கைது செய்துள்ளனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.