கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும் - சிறுமியை கடத்திய மனைவி!

Sexual harassment Crime Dindigul
By Sumathi Feb 26, 2025 10:30 AM GMT
Report

 கணவனுக்கு ஆயுள் கூட வேண்டுமென, மனைவி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

திண்டுக்கல், பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). இருவருக்கும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது.

ராமலட்சுமி

இந்நிலையில், சிறுமியுடன் கணவர் உல்லாசமாக இருந்தால், ஆயுள் கூடும் என்று ஜோசியர் ஒருவர், ராமலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். எனவே, ராமலட்சுமி சிறுமியை தேடியுள்ளார். தொடர்ந்து டூவீலரில் தேடி அலைந்துள்ளார்.

அப்போது தன்னுடைய வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் 14 வயது மகளைப் பார்த்துள்ளார். பின் அவரிடம் ஆசை வார்த்தைக்கூறி டூவீலரில் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின், வீட்டிற்குள் சிறுமியை அழைத்து சென்று கணவனுடன் ஒரே அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்!

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்!

தம்பதி கொடூரம்

இதனையடுத்து 14 வயது சிறுமியை கணவர் அழகுராஜா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். எங்குமே கிடைக்காததால் போலீஸில் புகாரளித்துள்ளனர். அதற்குள், சிறுமியை டூவீலரில் கொண்டுவந்து வீட்டுக்கு அருகில் இறக்கிவிட்டு ராமலட்சுமி தப்பித்துள்ளார்.

கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும் - சிறுமியை கடத்திய மனைவி! | Husband Sexual Harrassed Girl Long Live Dindigul

பிறகு இதுகுறித்த விசாரணையில், இச்சம்பவம் தெரியவரவே, அழகுராஜா, ராமலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.