பாஜகவுக்கா ஓட்டு போட்ட - விவாகரத்து செய்த கணவர் ? மனைவி பரபரப்பு புகார்
பாஜகவுக்கு ஓட்டு போட்டதற்காக தன் கணவர் விவாகரத்து வழங்கியுள்ளதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
அதன் பின் என் கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள், வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.ஒருகட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன், என்னை வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள். அதன் பின் என் கணவருடன் வாடகை அறையில் இருந்தேன்.
பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டு பாஜகவிற்கு வாக்களித்தேன். இந்த விஷயம் என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு என் மீது கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக என் கணவர் முத்தலாக் அளித்து விட்டார். இதனால் என் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெட்டுகொண்டார்.
கள்ளத்தொடர்பு
இது குறித்து வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் அவர் கணவர் தெரிவித்தாவது "நான் ஒன்றும் உடனடியாக முத்தலாக் தரவில்லை. கடந்த 30 மார்ச் 2022 அன்று முதல் தலாக் அளித்தேன், அதன்பிறகு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 முறை தலாக் சொன்னேன்.
இந்த காலகட்டங்களில் எந்த தேர்தலும் நடக்கவில்லை. என் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்தது. அந்த கள்ள உறவை துண்டித்து கொள்ளும்படி பலமுறை சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. அதனால்தான், முத்தலாக் அளித்தேன். மேலும் நாங்கள் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தவும் இல்லை. என் சகோதரிகள் வேறு நகரங்களில் வசித்து வருகிறார்கள் அவர்களை ஏன் குற்றம் சாட்டுகிறார் என புரியவில்லை என்று கூறியுள்ளார்.
முத்தலாக் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் பாஜகவுக்கு வாக்களித்தற்காக முத்தலாக் அளித்ததாக பெண் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.