சிறைக்கு கூட போறேன்.. மனைவியுடன் வேண்டாம்; வீட்டைவிட்டு ஓடிய கணவர் - போலீஸ் செய்த செயல்!

Bengaluru Relationship
By Sumathi Aug 21, 2024 09:00 AM GMT
Report

மனைவியின் தொல்லை தாங்க முடியாம‌ல் கணவர் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனைவி தொல்லை

பெங்களூரு, ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). அங்குள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

சிறைக்கு கூட போறேன்.. மனைவியுடன் வேண்டாம்; வீட்டைவிட்டு ஓடிய கணவர் - போலீஸ் செய்த செயல்! | Husband Ran Away From Home Over Wife Torture

இதனால் அவரது மனைவி, தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், தனிப்படை போலீஸார் விசாரணையை தொடங்கி அவரை தேடி வந்தனர். முகேஷின் செல்போன் எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயன்றதில் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து முகேஷ் தன்னுடைய செல்போனில் புதிய சிம் கார்டைப் பொருத்தி ஆக்டிவேட் செய்த நிலையில், அவர் நொய்டாவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்குள்ள வணிக வளாகத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த முகேஷை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

ஆபாசப்படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த கணவன் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆபாசப்படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த கணவன் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஓட்டம் பிடித்த கணவன்

அதன்பின் அவரிடம் விசாரித்ததில், “4 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. என் மனைவி ஏற்கெனவே விவாகரத்தானவர். அவருக்கு 12 வயதில் மகள் இருந்தபோதும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன். எங்களுக்கு அதன்பிறகு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சிறைக்கு கூட போறேன்.. மனைவியுடன் வேண்டாம்; வீட்டைவிட்டு ஓடிய கணவர் - போலீஸ் செய்த செயல்! | Husband Ran Away From Home Over Wife Torture

அதன் பிறகு என் மனைவி என்னை மிகவும் கட்டுப்படுத்த தொடங்கினார். வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார். எனது சுதந்திரத்தை முழுவதுமாக பறித்துக் கொண்டார். அவருடன் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன்.

என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்துவைக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி பெங்களூரு அழைத்து வந்த போலீஸார், இருவருக்கும் மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளனர்.