மகள்களுக்கு பாலியல் தொல்லை - 2வது கணவனை வெட்டிக்கொன்ற மனைவி!
மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் 2-வது கணவரை, மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொல்லை
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு(30). இவர் திருச்சியில் செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே சூளையில் பணிபுரிந்து கணவரை இழந்த பண்ருட்டியை சேர்ந்த ரேகா (30) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரேகாவுக்கு முதல் கணவர் மூலம் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனை தொடர்ந்து, பிரபு, ரேகா ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரபு திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார்.
வெட்டிக் கொலை
அதன்படி விசாரித்ததில், ரேகா மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பிரபுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், 16 மற்றும் 14 வயது மகள்களுக்கு பிரபு பாலியல் தொல்லை அளித்ததை ரேகா நேரில் பார்த்து கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்காததால் பிரபுவின் தலையில் அரிவாளால் வெட்டியும்,
அவரது தலையில் தடியால் தாக்கியும் கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் வசிக்கும் கூரை கொட்டகையின் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் உடலை தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆற்றில் அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் அது பிரபு என தெரியவந்தது. அதனையடுத்து ரேகா கைது செய்யப்பட்டுள்ளார்.