மனைவியின் ஃபோனை ஒட்டுக்கேட்ட கணவன்; மில்லியன் டாலர் வருமானமாம்.. பின்னணி இதுதான்!

United States of America
By Sumathi Feb 24, 2024 06:58 AM GMT
Report

கணவர் ஒருவர் மனைவியின் ஃபோனை ஒட்டுக்கேட்டு சம்பாதிக்கிறாராம்..

சட்டவிரோத வர்த்தகம்

டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசித்து வருபவர் லௌடன்(42). இவர் தனது தனது மனைவியின் அலுவலகம் தொடர்பான உரையாடல்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்ததன் மூலம் கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார்.

மனைவியின் ஃபோனை ஒட்டுக்கேட்ட கணவன்; மில்லியன் டாலர் வருமானமாம்.. பின்னணி இதுதான்! | Husband Overhearing Wife Office Calls Makes Money

அவரது மனைவி BP-ல் M&A மேலாளராக மேலாளராக இருந்துள்ளார். நிறுவனத்தின் கையகப்படுத்தல் திட்டங்களைப் பற்றிய முக்கியமான விவரங்களை கவனக்குறைவாக அவருக்கு வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

வேறொரு நபருடன் ரீல்ஸ் செய்த மனைவி - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய கணவன்!

வேறொரு நபருடன் ரீல்ஸ் செய்த மனைவி - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய கணவன்!

சிக்கிய கணவன் 

அதன்படி, ஓஹியோவை தளமாகக் கொண்ட ஒரு டிரக் ஸ்டாப் மற்றும் ட்ராவல் சென்டர் நிறுவனத்தைப் பெறுவதற்கான BP-ன் திட்டத்தின் பிரத்தியேக தகவலை கேட்டவுடன், லௌடன் தான் அதில் முதலீடு செய்துள்ளார். நிறுவனத்தின் 46,000 பங்குகளை இணைப்பு அறிவிப்புக்கு முன் வாங்கியுள்ளார்.

மனைவியின் ஃபோனை ஒட்டுக்கேட்ட கணவன்; மில்லியன் டாலர் வருமானமாம்.. பின்னணி இதுதான்! | Husband Overhearing Wife Office Calls Makes Money

தொடர்ந்து, அதனை உடனடியாக விற்று, 1.76 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 கோடி) லாபத்தைப் பெற்றுள்ளார். தற்போது, US செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் தகவலின் படி இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதனையடுத்த தொடர் விசாரணையில்,

அவருக்கு ந்து ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத்தண்டனை மற்றும் 250,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. லௌடனின் இத்தனை நடவடிக்கைகள் குறித்தும் அவரது மனைவிக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.