ஆபாச வீடியோக்களைக் காட்டி சித்திரவதை; கணவரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
ஆபாச வீடியோக்களைக் போல அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் என இளம்பெண் தனது கணவர் மீது புகாரளித்துளார்.
கணவர் சித்திரவதை
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பசவனகுடியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளார். அழகுக் கலை நிபுணராக பணிப்புரியும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமும் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் அண்மையில் பெங்களுருவில் உள்ள காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகாரளித்துள்ளார். அந்த புகாரில், " அவருடைய நட்பு காதலாக மாறியது. இதனால் அவரை திருமணம் செய்வதற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்தேன்.
கடந்த 2018-ம் ஆண்டு திருப்பதியில் விக்னேஸ்வரனை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். திருமண சில நாட்கள் என்னை அவர் நல்ல முறையில் நடத்தினார். ஆனால் படிப்படியாக விக்னேஸ்வனின் நடத்தை விபரீதமாக மாறியது.
அவரது பெற்றோர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து காரணமே இல்லாமல் என்னுடன் தகராறு செய்தனர். இந்நிலையில், எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இருவரையும் கணவர் விக்னேஸ் சரியாக கவனிக்கவில்லை. என் முதல் திருமணம் குறித்து அடிக்கடி பேசி அவமானப்படுத்தினார்.
நேர்ந்த கொடூரம்
என்னையும், என் குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.அத்துடன் ஆபாச வீடியோக்களை காட்டி அதுபோல என்னையும் நடந்து கொள்ளுமாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதற்கு ஒத்துழைக்காத என்னை பலமுறை தாக்கினார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தார்.
அப்போது வீட்டிற்கு கால்கேர்ள்களை (விபசாரம்) அழைத்து வந்து அநாகரீமாக நடந்து கொண்டு மனரீதியாக துன்புறுத்தினார். இதுகுறித்து ஏற்கனவே போலீஸில் நான் புகார் அளித்த போது, இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று காவல் நிலையத்தில் எழுதித் தந்தார்.
ஆனாலும் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். அவரது தாய், தந்தை, சகோதரி ஆகியோரும் என்னை துன்புறுத்தி வருகின்றனர்" இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக போலீசார்,புகார் அளித்த இளம்பெண்ணின் கணவர் விக்னேஸ்வரன் (36), மாமியார் விஜயலட்சுமி (60), மாமனார் கலைச்செல்வன் (63), நாத்தனார் பிரியதர்ஷினி (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.