ஆசிட்டை வாயில் ஊற்றி கொடுமைப்படுத்திய கொடூர கணவன்! என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் மனைவியின் வாயில் ஆசிடை ஊற்றி கொடுமை செய்த கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரில், ஒருவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார் . அவருக்கும் அந்த பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .

மேலும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார் .

கடந்த வாரம் ஒரு நாள் கணவர் ஆசிட் வாங்கிவந்துள்ளார். பிறகு தனது மனைவியை ஆசிடை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் . அதற்கு அந்த பெண் மறுத்து வீட்டுக்குள் ஓடினார்.

ஆனால் அந்த கணவன் விடாமல் துரத்தி அந்த மனைவியை பிடித்து அவரின் வாயை திறக்க வைத்து வலுக்கட்டாயமாக அந்த ஆசிடை அவரின் வாயில் ஊற்றினார்.

இதில் படுகாயமடைந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை இந்த கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு கணவனோ அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகிய கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்