மனைவி அனுமதியின்றி அந்தரங்க விஷயங்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவன் செயல்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது கணவர் ரகசியமாக அந்தரங்க செயல்களை வீடியோ பதிவு செய்து, அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து உறவினருடன் பகிர்ந்து கொண்டதாக புகாரளித்துள்ளது.
தொடர்ந்து கணவன் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் திவாகர்,
" மனைவி என்பது கணவரின் நீட்சி அல்ல, மனைவியின் உடல் அவருடைய சொந்த சொத்து, அவளுடைய தனிப்பட்ட மற்றும் நெருக்கமான வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவருடைய சம்மதம் முதன்மையாக வேண்டும். கணவரின் பங்கு என்பது எஜமானர் அல்லது உரிமையாளரின் பங்கு கிடையாது.
வழக்கு தள்ளுபடி
ஆனால் மனைவியின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் அவரின் தனித்துவத்தை மதிக்கும் ஒரு சமமான பார்ட்னர் ஆவார். அப்படிப்பட்ட நிலையில், மனைவிக்கு உரிய இந்த உரிமைகளை கட்டுப்படுத்துவது அல்லது அவரது உரிமைகளை மீறும் முயற்சிகள் மற்றும் துஷ்பிரயோகம் செய்வது அல்லது அந்தரங்க விவரங்களை பகிர்வது என்பது நம்பிக்கை மற்றும் சட்டத்தின்படி பார்த்தால் தவறு.
திருமணம் என்பது கணவருக்கு மனைவி மீது உரிமையையோ அல்லது அவரது மனைவியின் மீதான கட்டுப்பாட்டையோ வழங்காது. மேலும் திருமணம் என்பது மனைவியின் தனிப்பட்ட விஷயங்கள் அல்லது தனியுரிமைக்கான உரிமையை நீர்த்துப்போகச் செய்யாது.
ஃபேஸ்புக்கில் நெருக்கமான வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம்,மனுதாரர் திருமண உறவின் புனிதத்தன்மையை கடுமையாக மீறியுள்ளார். கணவரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.