ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி எடுத்த விபரீத முடிவு!

Tamil nadu Chennai Death Murder
By Jiyath Apr 23, 2024 09:50 AM GMT
Report

கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆணவக்கொலை 

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி எடுத்த விபரீத முடிவு! | Husband Murdered Wife Commits Suicide

இவர்களது காதலுக்கு ஷர்மிளாவின் வீட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24- ம் தேதி பிரவீன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஷர்மிளாவின் சகோதரரான தினேஷ் (எ) குட்டி அப்பு உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

மனைவி தற்கொலை 

ஆனால், தனது கணவரை ஆணவ படுகொலை செய்ய காரணமான, தனது பெற்றோர் மற்றும் இன்னொரு சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என ஷர்மிளா கூறிவந்தார். மேலும், அவர் மிக மனவேதனையிலும் இருந்து வந்துள்ளார்.

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி எடுத்த விபரீத முடிவு! | Husband Murdered Wife Commits Suicide

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது மாமனார், மாமியார் ஷர்மிளாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஷர்மிளா உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.