9 வருஷம்.. செப்டிக் டேங்கில் கணவனின் எலும்புகள் - மனைவி வெறிச்செயல்!

Attempted Murder Sivagangai
By Sumathi Sep 13, 2023 05:06 AM GMT
Report

8 வருடங்களுக்குப் பின் செப்டிக் டேங்கில் இருந்து கணவனின் எழும்பு மீட்கப்பட்டுள்ளது.

கணவன் கொலை

சிவகங்கை, தேவகோட்டையைச் சேர்ந்த ராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து மனித எழும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனே தகவலின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

9 வருஷம்.. செப்டிக் டேங்கில் கணவனின் எலும்புகள் - மனைவி வெறிச்செயல்! | Husband Murder Wife Arrested 9 Years Sivagangai

அதில், அவரது வீட்டில் ஏற்கனவே ஆம்னி பஸ் டிரைவரான பாண்டி என்பவர் வசித்துள்ளார். அவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 1 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாண்டி சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மனைவி கைது

அப்போது சம்பவத்தன்று பாண்டி குடித்து விட்டு மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டு மோதல் நடந்துள்ளது. அதில் பாண்டியின் தலை சுவற்றில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

9 வருஷம்.. செப்டிக் டேங்கில் கணவனின் எலும்புகள் - மனைவி வெறிச்செயல்! | Husband Murder Wife Arrested 9 Years Sivagangai

உடனே, மனைவி அவரது உடலை தனது வீட்டின் கழிப்பறை தொட்டியில் போட்டுள்ளார். 6 மாதத்திற்கு பின் அந்த வீட்டில் இருந்து காலி செய்துள்ளார். இதற்கிடையில், பாண்டியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரனை நடத்தியதில் கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், மாதந்தோறும் தனக்கு பணம் அனுப்புவதாகவும் சுகந்தி கூறியுள்ளார்.

தற்போது, சுகந்தியை கைது செய்த போலீஸார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர். கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 9 ஆண்டுகளாக மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.