கள்ளக்காதலனுடன் மனைவி செய்த செயல் - வீடியோவை இணையத்தில் வெளியிட்ட கணவர்
கள்ளக்காதலனுடன் மனைவி இருந்த வீடியோவை கணவர் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலியை சேர்ந்த 35 வயதான பெண் தனது காதலருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்பை கேமரா
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், பெண்ணின் கணவர் மனைவிக்கு தெரியாமல் அவரை கண்காணிக்க வீட்டில் ஸ்பை கேமரா மறைத்து வைத்துள்ளார். ஆனால், இதை கவனிக்காத அந்த பெண் தனது கள்ளக்காதலனை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
மனைவி மீது இருந்த கோபத்தில் கேமராவில் பதிவான காட்சிகளை அப்பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அப்பெண்ணின் கணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.