மகா கும்பமேளாவில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி - கணவர் வெறிச்செயல் -பகீர் பின்னணி!
மகா கும்பமேளாவில் மனைவியைக் கணவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகா கும்பமேளா
டெல்லி, திரிலோக்புரில் வசித்து வருபவர்கள் அசோக் குமார்- மீனாக்ஷி தம்பதியினர் . இவர்களுக்குத் திருமணமாகி ஆஷிஷ் மற்றும் அஷ்வின் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடக் கணவன் மனைவி இருவரும் அங்குச் சென்றுள்ளனர்.
பின்னர் கும்பமேளாவிலிருந்து வீடு திரும்பிய அசோக் குமார், தனது மூத்த மகன் ஆஷிஷிடம் அம்மா மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் தொலைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த 2வது மகன் அஷ்வின், அம்மாவைத் தேடி கும்பமேளாவிற்குச் சென்றுள்ளார்.அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, பிரயாக்ராஜில் உள்ள விடுதியின் குளியலறையில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக இருப்பதாகத் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவி கொலை
இதனையடுத்து இறந்த பெண்ணின் புகைப்படத்தைச் செய்தாளில் விளம்பரம் செய்தனர். இதனைக் கண்ட மீனாக்ஷியின் சகோதரர் மற்றும் மகள் பிரயாக்ராஜ் , கணவர் அசோக் குமார் சென்றனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசோக் குமார் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தார்.
இதில் சந்தேகம், அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அசோக் குமார், தனக்குத் வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணுடன் வாழ்வதற்குத் தனது மனைவியைக் கும்பமேளா அழைத்துவந்து கொன்றதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைந்தனர்.