அதிக செலவு செய்த மனைவி - விரக்தியில் கணவர் செய்த கொடூரம்
அதிக செலவு செய்ததால், கணவர் மனைவியை கொலை செய்துள்ளார்.
மனைவியின் செயல்
கர்நாடகா, பொம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஹரீஷ். இவரது மனைவி பத்மஜா(29). இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. 2 பேரும் என்ஜினீயரிங் படித்துள்ளதால், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஹரீஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடையில் பெருட்கள் வாங்கிவந்த பத்மஜாவை, அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி வந்திருப்பதாக கூறி ஹரீஷ் சண்டையிட்டுள்ளார்.
கணவர் வெறிச்செயல்
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹரீஷ், பத்மஜாவை தாக்கியதுடன் கழுத்தை நெரித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
பின் பத்மஜாவின் கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தனது மனைவி கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி போலீசாரிடம் ஹரீஷ் நாடகமாடியுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்ததால், ஹரீஷிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.