நடத்தையில் சந்தேகம் - நடுரோட்டில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்!
சந்தேகப்பட்டு மனைவியை, கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தையில் சந்தேகம்
சிவகங்கை, தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சூர்யா. தனியார் மருத்துவமனையில் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சூர்யா. பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சூர்யா தனது வீட்டில் இருந்து காலை பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு சரஸ்வதி வாசக சாலை அருகே டூவீலரில் சென்றுள்ளார்.
மனைவி கொலை
தொடர்ந்து, எதிரில் டூவீலரில் வந்த பிரபாகரன் தனது டூவீலரை கொண்டு சூர்யாவின் டூவிலர் மீது மோதியுள்ளார். இதில் தடுமாறி சூர்யா கீழே விழுந்த நிலையில், பிரபாகரன் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் அவரது கழுத்தை வெட்டியுள்ளார்.
இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனையடுத்து, காவல் நிலையத்தில் பிரபாகரன் சரணடைந்தார். இதுகுறித்த விசாரணையில், சூர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரபாகரன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.