பாபநாசம் படம் போல் நடந்த சம்பவம் -மனைவியை கொன்ற கொடூர கணவன் - சிக்கியது எப்படி?
நபர் ஒருவர் தனது மனைவியை கொன்று பிணமே கிடைக்காமல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவன்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மனஸ்சாஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் பட். இந்திய வம்சாவளியான இவரது மனைவி மம்தா காப்லே பட். நரேஷ் பட் மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.இதில் அதே மருத்துவனையில் அவரது மனைவியும் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில் மம்தா காப்லே காணாமல் போயுள்ளார் என்று தெரியவந்தது. ஆனால் தனது மனைவியை பற்றி எந்த புகாரும் அளிக்காமல் நரேஷ் சகஜமாகவே இருந்துள்ளார். ஆனால் மம்தா பல நாட்களாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராததால்
அவர் பணிபுரிந்த மருத்துவ நிறுவனம்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் நரேஷ் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற உள்ளதாகவும், அதனால் பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மனைவி காணாமல் போவதற்கு முன்பும், பின்பும் நரேஷின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் இருந்துள்ளது என போலீசார் கண்டுப்பிடித்தனர். இதனிடையே, மம்தா மாயமாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நரேஷ் தனது ஃபோனில் இரண்டாம் திருமணம் செய்வது குறித்து தேடியுள்ளார்.
சிக்கியது எப்படி?
அதுமட்டுமல்லாமல் மனைவி இறந்தால் அவர் கட்ட வேண்டிய கடன் என்னவாகும்? போன்ற கேள்விகளையும் தேடியுள்ளார். அதுமட்டுமின்றி, மம்தா காணாமல் போவதற்கு சில நாட்கள் முன்னதாக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பல வகை கத்திகளை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நரேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். மம்தாவின் பிணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மம்தாவின் ரத்தத்தின் மரபணு மாதிரிகள் நரேஷின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, மம்தாவை கொன்று துண்டுகளாக வெட்டி நரேஷ் அப்புறப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் மம்தா உயிருடன் இருப்பதாகவே தொடர்ந்து நரேஷ் கூறி வருகிறார். மம்தாவின் பிணம் என எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.