மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து வீட்டிலேயே புதைத்த கொடூர கணவன்...!
உ.பி.யில், தனது மனைவிக்கு மின்சாரம் பாய்ச்சி, கொலை செய்து, அவரது சடலத்தை வீட்டில் உள்ள அறையில் கணவன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்
உத்தரபிரதேசத்தில் மற்றொரு கொடூரமான கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்திரபிரதேசம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள ஹபிசாபூடிரைச் சேர்ந்தவர் முகமது வாசி. இவர் அப்பகுதியைச் சேர்ந்த உமா ஷர்மா என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, வாசி தன் மனைவி உமா ஷர்மாவை இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்.
இதனையடுத்து, உமா ஷர்மாவின் பெயரை அக்ஷா பாத்திமா என்றும் மாற்றினார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், வாசிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர்களுக்கு மீண்டும் சண்டை வர, உமா ஷர்மாவை, வாசி கொடூரமாக தாக்கினார்.
மேலும், கோபம் அடங்காத வாசி தன் மனைவி மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். மின்சாரம் பாய்ந்ததால் உமா ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடலை வாசி தன் வீட்டிலேயே புதைத்துள்ளார்.
கொலை நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, கான்பூரிலிருந்து வாசியின் தாய் ஆஷியா பேகம் மகனிடம் உமா ஷர்மா எங்கே சென்று கேட்டுள்ளார். அதற்கு வாசி அவள் எங்கேயோ சென்றுவிட்டாள் என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கணவன்
மகனின் பேச்சில் சந்தேகம் அடைந்த மாமியார் இது குறித்து காவல்துறையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வாசி வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் வாசிமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் வாசி தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் வீட்டிற்குள் புதைக்கப்பட்ட உமா ஷர்மாவின் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட முகமது வாசி அவளை மின்சாரம் தாக்கியதை ஒப்புக்கொண்டதாகவும் வட்ட அதிகாரி (CO) தெரிவித்தார். குற்றவாளி வாசி கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.