google search செய்து கொலை; மனைவியின் உடலை 200 துண்டாக வெட்டி கொன்ற கணவன்!
இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று 200 துண்டுகளாக வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கொலை
இங்கிலாந்தை சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன்(28) என்பவருக்கு ஹோலி பிராம்லி (26) என்ற பெண்ணுடன் காதல் திருமணமாகி 16 மாதங்களே ஆகியுள்ளது. மெட்சன் மணம் முடிந்ததில் இருந்து மனைவி பிராம்லியை அவரது தாயிடம் பேசவோ அல்லது குடும்பத்தினரிடம் பேசவோ அனுமதித்ததில்லை என்று சொல்லப்படுகிறது.
சில பிரச்சனையால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு லிங்கன்ஷயர் காவல்துறையில் பிராம்லியின் தாயார் அவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதன்படி, வழக்கை விசாரிக்க மெட்சன் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, அவர் தனது மனைவி கைகளை கடித்துவிட்டு மனநல காப்பக ஆய்வாளர்களுடன் சென்றுவிட்டாள்’ எனக் கூறியுள்ளார். அங்கு ப்ளீச்சிங் பொடி நாற்றம் வீசியதால் போலீசார் உள்ளே ஆய்வு செய்தனர். பின்னர், படுக்கையறை தரையில் இரத்தக் கறை மற்றும் ரம்பம் ஆகியவற்றை போலீசார் கவனித்துள்ளனர்.
200 உடல் துண்டுகள்
தீவிர விசாரணைக்குப் பின் மெட்சன் கைது செய்யப்பட்டார். மறுநாள் அப்பகுதியின் ஆற்றில் மனித உடல் 224 துண்டுகளாக வெட்டப்பட்டு மூட்டைகள் கிடைத்தது,சோதனையில் அது பிராம்லியின் உடல் என்று கட்டியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்சனை விசாரித்தபோது எனக்கு அதில் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மறுத்த அவர் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிராம்லியை படுக்கை அறையில் வைத்து பலமுறை கத்தியால் குத்தி கொன்றேன். பிறகு காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக அவளது உடலை குளியலறைக்கு எடுத்துச் சென்று பல துண்டுகளாக வெட்டி பைகளில் அடைத்து வைத்திருந்தேன். எனது நண்பனான ஹான்காகிடம் பணம் கொடுத்து பிராம்லி உடல் அடைத்து வைத்திருந்த மூட்டைகளை ஆற்றில் வீசி விடும்படி சொன்னேன் அதன்படியே அவனும் விசியதாக கூறியுள்ளார்.
கொன்ற கணவன்
இது குறித்து பேசிய பிராம்லியின் தாய், `இந்த கொடூர அரக்கன் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் மீள முடியாத துயரத்தை எங்களுக்கு கொடுத்து விட்டான்.பிராம்லிக்கு இவனுடன் திருமணம் ஆன போதிலிருந்தே இருவருக்கும் பிரச்னைகள் நடந்து கொண்டே தான் இருந்தது. அவள் ஆசை ஆசையாக வளர்த்த நாயை வாஷிங்மெஷினில் போட்டு கொன்றான்.
அவள் வளர்த்த வெள்ளை எலியை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொன்றான். இப்படி ஒரு கொடிய மிருகத்துடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று அவனை பிரியும் எண்ணத்திலேயே எங்கள் மகள் இருந்தாள். அவன் செய்த கொடுமைகளால் பிராம்லியை எங்களால் பார்க்க கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக மெட்சனை சோதனையிடும்போது, அவரது கூகுள் ஹிஸ்ட்ரியில் ‘இறந்த உடலை எப்படி அகற்றுவது’, ‘என் மனைவி இறந்தால் என்ன பலன் கிடைக்கும்’, ‘கடவுள் கொலையை மன்னிப்பாரா’ என்று தேடியுள்ளார்.