மனைவி திருடியாதாக சந்தேகம் - சிக்கன் வருவல் வாங்கி கொடுத்து கொன்ற கணவன்!

Attempted Murder Andhra Pradesh
By Vinothini Jun 25, 2023 07:45 AM GMT
Report

 கணவர் சிக்கன் வருவலில் விஷத்தை கலந்து மனைவிக்கு கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகப்பட்ட கணவன்

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டத்தில் கோட்டே முக்காலை பகுதியை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியநிலையில் 2 மகள்கள் உள்ளனர்.

husband-killed-his-wife-for-stealing-money

அனுமந்தராவின் தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோர் இவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். அச்சமயத்தில் அனுமந்தராவ் பீரோவில் வைத்திருந்த பணம் திடீரென காணாமல் போனது.

இதனை இவரது மனைவி தான் எடுத்திருப்பார் என்ற சந்தேகத்தில் இவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்பொழுது அவர் தான் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கொலை

இந்நிலையில், ஆத்திரமடைந்த கணவன் ஓட்டலில் இருந்து சிக்கன் வறுவலை வாங்கியுள்ளார். பிறகு அதில் விஷத்தை கலந்து சாப்பிடுமாறு கொடுத்தார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மனைவி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

husband-killed-his-wife-for-stealing-money

அதன்பின்னர் இவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதியிடம் விசாரணை நடத்தியபோது, இவரது கணவன் சிக்கன் கொடுத்ததாகவும் அதனால் தான் இவ்வாறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இவரது கணவன் மற்றும் இவரது தாய், சகோதரரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.