ஒரு பிரியாணிக்கு போய்... ஆசையாய் கேட்ட மனைவி - எரித்து கொன்ற கணவன்!

Attempted Murder Chennai Crime Death
By Sumathi Nov 09, 2022 06:08 AM GMT
Report

தனக்கும் பிரயாணி வேண்டும் என கேட்ட மனைவியை கணவன் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி தகராறு

சென்னை, அயனாவரம் தாகூர் நகரைச் சேர்ந்தவர் கருணாகரன்(75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி பத்மாவதி(66). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பிள்ளைகள் நால்வருக்கும் திருமணமாகிய நிலையில், கணவரும் மனைவியும் தனியாக வசித்து வருகின்றனர்.

ஒரு பிரியாணிக்கு போய்... ஆசையாய் கேட்ட மனைவி - எரித்து கொன்ற கணவன்! | Husband Killed His Wife For Biriyani

இந்நிலையில் மனைவிக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் பிள்ளைகள் வீட்டில் தங்க வைத்துள்ளனர். ஆனால் அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மனைவி எரிப்பு

மேலும், கணவர் மனைவி இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டும், அதனால் பேசாமலும் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து பத்மாவதிக்கு கணவர் சரியாக சாப்பாடு வாங்கி தருவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு கருணாகரன் பிரியாணி வாங்கி தனியாக சாப்பிட்டுள்ளார்.

இதனால் மனைவி தனக்கும் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். அதில் ஓடிவந்து மனைவி கணாவரை பிடித்து கொண்டதால் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கூறப்பட்டு, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 50சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கணவரும் உயிரிழந்துள்ளார்.