ஆசை மனைவியை 8 துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கணவர் - கொடூர சமபவம்!
மனைவியை கொன்ற கணவர் துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி - கணவர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுனரான இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, அவரது முதல்மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு சரண்யா (29) என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதில் தீபாவளிக்கு முந்தைய நாள் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இருந்து சரண்யாவை காணவில்லை. குழந்தைகள் தாய் குறித்து தந்தையிடம் கேட்ட போது சரண்யா கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டு சென்றதாக கூறியுள்ளார். இந்த நிலையில், சரண்யாவை காணவில்லை என்று கோபி தரப்பினர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் குழந்தைகளிடம் கேட்ட போது அம்மா உங்கள் வீட்டிற்கு தான் சென்று உள்ளதாக அப்பா தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
கொடூர சமபவம்
இதனால் சந்தேகமடைந்த சரண்யாவின் பெற்றோர் கோபியிடம் விசாரணை நடத்த போலீசாரிடம் கூறினர். இது தொடர்பாக போலீசார் வருவதை கண்டதும் அவர் தப்பி சென்று விட்டார். அங்கு இருந்த கோபியின் தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவர் பின்னர் சரண்யாவை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து சூளகிரி காட்டு பகுதியில் வீசியதாக தெரிவித்தார். மேலும் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த கோபியும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு போலீசார் சூளகிரி காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு சரண்யாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு சூட்கேசில் கவரில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
அதிலும் தலை உள்ளிட்ட ஒரு சில உடல்பாகங்கள் மட்டுமே கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.