மனைவியின் கழுத்தை அறுத்து கொலை.. 2 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த 2வது கணவர் - அதிர்ச்சி!
ஒருவர் தனது மனைவியை கொன்று சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கொலை
சென்னை, ஆவடியில் சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன். இவர் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக அம்பத்தூரில் வேலை செய்து வருகிறார். அங்கு 25 வயதான சாராம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் அதனை மறைத்து ஜான்சனை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், சில நாட்களில் இவருக்கு திருமனனமானது ஜான்சனுக்கு தெரியவர இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து சாக்கு பையில் கட்டி வைத்துவிட்டார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இதனை அறிந்த ஜாக்சன் காவல் நிலையத்திற்கு சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். இவர் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் இவரது வீட்டில் மனைவியின் அழுகிய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜாக்சனை கைது செய்து விசாரித்ததில், "சாரம்மாளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆந்திராவில் திருமணம் நடந்திருக்கிறது. முதல் கணவர் அம்மாவாசு உயிருடன் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
தற்போது இரண்டு மகன்களும் ஆவடி நந்தவன மேட்டூரில் உள்ள அம்மா வீட்டில் இருக்கிறார்கள். இதை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்றேன்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.